Read in English
This Article is From Jun 10, 2020

தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு 84 பில்லியன் டாலர் இழப்பினை சந்திக்கும் விமான நிறுவனங்கள்!

விமான பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் சராசரி இழப்பு 38 டாலர்களாகும். இந்திய மதிப்பில் 2,868 ரூபாயாகும்.

Advertisement
உலகம்

The average loss amounts to almost $38 per passenger flown. (File)

உலக அளவில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய நிலவரப்படி 71 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் சர்வதேச விமான வர்த்தகமானது பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்(IATA) தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் 84 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகளை சந்திக்க நேரிடும் என விமான போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது. இந்த இழப்பு எண்ணிக்கையானது இன்னும் அதிகரித்து கடந்த ஆண்டும் 838 பில்லியன் டாலராக இருந்த வருவாய் நடப்பு ஆண்டில் 419 பில்லியன் என சரி பாதியாக குறைவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என IATA தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் விமானங்கள் ஓடாத ஒவ்வொருநாளும் 230 மில்லியன் டாலர் வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்தது என IATA டைரக்டர் ஜெனரல் அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் கூறியுள்ளார்.

விமான பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் சராசரி இழப்பு 38 டாலர்களாகும். இந்திய மதிப்பில் 2,868 ரூபாயாகும்.

Advertisement

2021-ம் ஆண்டில் விமான நிறுவனங்கள் தங்கள் சந்தையை தக்க வைத்துக்கொள்ள விமான கட்டணங்களை குறைக்க நேரிடும். இதனால் விமான நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புகளை சந்திக்க நேரிடும் என IATA எச்சரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் விமான நிறுவனங்களிடையே போட்டிகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக நிறுவனங்கள் பலவீனமாக இருக்கும் என டி ஜூனியாக் குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களுக்கிடையேயான போட்டி காரணமாக பயணிகளின் விமான போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திருபும் வாய்ப்பிருக்கின்றது.

இது நடைமுறை சாத்தியமானால் 2021 வருவாய் 598 பில்லியன் டாலராக உயரும் என்று IATA கணித்துள்ளது.

Advertisement

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை, தற்போது உயர்ந்து வரும் கடன் மற்றும் குறைந்து வரும் நுகர்வோர் எண்ணிக்கை குறித்து கணக்கிட தொடங்கியுள்ளன.

2019-ல் இருந்த விமான பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போதைய நடப்பு ஆண்டில் 25 சதவிகிதமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையானது 2.25 பில்லியனாக உள்ளது. 2021 காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கையானது 3.38 பில்லியனாக உயர வாயப்புள்ளது. இக்காலக்கட்டங்களில் சரக்கு விமான போக்குவரத்துகள் பெரிதளவு கை கொடுத்ததாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஒரு புறம் நுகர்வோர் வருவாய் குறைவு இருந்த போதிலும் விமான நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் கடைப்பிடிக்கின்றன. பிரிட்டனில் விமான பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement