ஆண்டுக்கு 10 - 15 லட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் தனியார் மயமாக்குவதில் இணைக்கப்பட்டுள்ளன.
New Delhi: முதல்கட்டமாக 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு செய்திருந்தது.
இந்த 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கடந்த பிப்ரவரியில் அதானி குழுமம் பெற்றது. இதன்படி அகமதாபாத், திருவனந்தபுரம், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களை பராமரிக்கும்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக 20 - 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளத. ஆண்டுக்கு 10 - 15 லட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் தனியார் மயமாக்குவதில் இணைக்கப்பட்டுள்ளன.