ஹிந்தியில் சரியாகவும் ஆங்கிலத்தில் தவறாகவும் உள்ளது அந்த அறிவிப்பு.
இந்திய திரைப்பட நடிகையான சாபனா ஆஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையே அந்த புகைப்படம். ஹிந்தியில் சரியாகவும் ஆங்கிலத்தில் தவறாகவும் உள்ளது அந்த அறிவிப்பு.
அந்த அறிவிப்பு பலகையில் ‘கம்பளத்தை உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது' என இருந்தது. ஆனால் அதன் உண்மையான அறிவிப்போ ‘கம்பளத்தில் அமர்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது' என்று இருக்க வேண்டும். அமர்ந்து என்ற ஒற்றை வார்த்தை இல்லாததால் அறிவிப்பின் முழு பொருளும் மாறியுள்ளது.இந்த புகைப்படமானது 2015 யில் கிளிக் செய்யப்பட்டது.
இந்த புகைப்படம் வைரலான நிலையில் விமான நிலைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். “2015 இல் எடுக்கப்பட்டதாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் மார்ப்பிங் செய்யப்பட்டதென்றும், இதுபோன்ற உண்மையல்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது” என்று விமான நிலையத்தின் உயர்மட்ட அமைப்பு ட்வீட் செய்துள்ளது.
இண்ஸ்டாகிராமில் ஷபானா அஷ்மியின் பதிவினைத் தொடர்ந்து இந்த எதிர்வினை 3,500க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. பலவகையிலும் கமெண்டுகளையும் பெற்றது.
இந்த புகைப்படத்தை முதலில் தொழிலதிபர் ஜஸ்டின் ரோஸ் லீ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
Click for more
trending news