ஸ்ரீநகர், ஜம்மு பகுதிகளில் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
New Delhi: பாகிஸ்தான் எல்லை பகுதியை நெருங்கி உள்ள ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் ராணுவ விமானங்குக்கு மட்டுமே அனுமதி என்றும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாலகோட் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. ''மிராஜ்-2000'' ரகத்தை சேர்ந்த 12 போர் விமானங்கள், சுமார் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி நடத்திய அதிரடி தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - ஜம்மூ காஷ்மீரில் 2 ஜெய்ஷ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!