அபிஷேக் பச்சன் பகிர்ந்த புகைப்படம் (Image courtesy: Instagram)
ஹைலைட்ஸ்
- அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மாலத்தீவில் உள்ளனர்.
- தேன் மற்றும் நிலவு -அபிஷேக் பச்சனின் கேப்ஷன்
- தன் பெற்றோர்களுடன் ஆராதயாவும் சென்றிருந்தால்
New Delhi: அபிஷேக் பச்சன் தன் மனைவி ஐஸ்வர்யா பச்சன் மற்றும் தன் குழந்தை ஆராதியாவுடன் மாலத்தீவில் விடுமுறையைக் கழித்து வருகிறார். அபிஷேக் பச்சன் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பச்சனின் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “தேன் மற்றும் நிலவு” என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் தங்களுடைய 12வது வருட திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். புகைப்படத்தில் ஐஸ்வர்யா நீல நிற உடையில் பெரிய கல் பதித்த ட்ரெண்டியான நெக்லெஸ் அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த சில மணி நேரங்களிலே 2.5 லட்சம் லைக்குகள் கிடைத்தன.
அபிஷேக் பச்சனின் போஸ்ட் இதோ:
ஐஸ்வர்யா பச்சனின் போஸ்ட் இதோ:
இரண்டாவது புகைப்படத்தை மகள் ஆராதியா எடுத்திருக்கிறாள், “எங்கள் வாழ்வின் தேவ ஒளியான ஆராதியா எங்களை புகைப்படம் எடுத்திருக்கிறாள்” என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா பச்சன்.
மாலத்தீவில் எடுத்த சில புகைப்படங்களை இண்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருந்தார் அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன் எப்போதும் தன்னுடைய திருமண நாளை மனைவி ஐஸ்வர்யா பச்சன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் கொண்டாடுவதுதான் வழக்கம். இதோ அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா மற்றும் ஆராதயாவின் ஏர்போர்ட் காட்சிகள்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகும்.