ஹைலைட்ஸ்
- பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் இவர்
- மனிரத்னம் படத்தில் நடிப்பது பெறுமையாக கருதுவதாக தெரிவித்தார் இவர்
- தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர் இவர்
சென்னையில் கடை திறப்பு விழாவிற்கு வந்த ஐஷ்வர்யா ‘பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
பல்வேறு காலகட்டங்களில் பல இயக்குநர்கள் வரைலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக இயக்க முயற்சித்து தோல்வியை கண்டனர். தற்போது இந்த கதையை மணிரத்னம் தன் கையில் எடுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் இடம்பெற்ற எந்த நடிகருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மனிரத்னமும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிடவில்லை.
ஆனால் நடிகை ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை, சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் பட விழாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாராய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கும் தனக்கும் பல ஆண்டுகளாகவே நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது சிறப்பான தருணம். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் பெருமைக்குரியது கூறினார்” இவரைக்கான ஏராளமான ரசிகர்கள் கடை வாசல் முன்பு கூடியிருந்து ஐஷ்வர்யாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.