This Article is From Mar 02, 2020

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் CAA க்கு எதிரான தீர்மானம் தேவையில்லை: அஜித் பவார்

முன்னதாக, உத்தவ் தாக்கரே தனது அரசாங்கமானது, குறிப்பிட்ட மதத்தினை சார்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட என்.ஆர்.சி.யை செயல்படுத்த அனுமதிக்காது என்று கூறியிருந்தார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் CAA க்கு எதிரான தீர்மானம் தேவையில்லை: அஜித் பவார்

புதிய குடியுரிமையை சட்டம், மற்றும் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அஜித் பவார்

Mumbai:

பீகாரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் குறிப்பிட்டு, சிலர் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் குறித்து "தவறான தகவல்களை" பரப்புகிறார்கள் என்றும், இந்த விவகாரம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அஜித் பவார் கூறியுள்ளார்.

புதிய குடியுரிமையை சட்டம், மற்றும் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும், இந்த விவகாரத்தில் "தவறான தகவல்களை" பரவுவதாகவும் மகாராஷ்டிரா துணை முதல்வரும், மூத்த என்சிபி தலைவருமான அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், மாநில சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எந்த தீர்மானத்திற்கும் அவசியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "CAA, NRC மற்றும் NPR யாருடைய குடியுரிமையையும் பறிக்காது" என்றும் அவர் கூறினார்.

பீகாரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் குறிப்பிடுவதன் மூலம் சிலர் CAA, NRC மற்றும் NPR பற்றி "தவறான தகவல்களை" பரப்புகிறார்கள் என்றும், இந்த விவகாரம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பீகார் சட்டமன்றம் கடந்த மாதம் ஒருமனதாக மாநிலத்தில் என்.ஆர்.சி தேவையில்லை என்றும், என்.பி.ஆர் 2010 வடிவமைப்பின் படி மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

கடந்த டிசம்பரில் என்.சி.பி தலைவர் சரத் பவார் மற்ற எட்டு மாநிலங்களைப் போலவே, மகாராஷ்டிராவும் புதிய குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மறுக்க வேண்டும், இது இந்தியாவின் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்டிராவில் என்.ஆர்.சி செயல்படுத்தப்படாது என்று என்.சி.பி தலைவரும் மாநில அமைச்சருமான நவாப் மாலிக் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் மற்றொரு அங்கமான காங்கிரஸ், NPR மற்றும் CAA க்கு எதிராக ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தது.

கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், முதல்வர் உத்தவ் தாக்கரே, சி.ஏ.ஏ பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறியிருந்தார். NPR யாரையும் நாட்டிலிருந்து வெளியேற்ற போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, உத்தவ் தாக்கரே தனது அரசாங்கமானது, குறிப்பிட்ட மதத்தினை சார்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட என்.ஆர்.சி.யை செயல்படுத்த அனுமதிக்காது என்று கூறியிருந்தார்.

.