This Article is From Mar 13, 2019

ராணுவ வீரர்களுடன் திருமண நிகழ்ச்சியை கொண்டாடிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்

முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, அவரது தோழி ஷ்லோகா மேத்தாவை கடந்த சனிக்கிழமையன்று திருமணம் முடித்தார். திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ராணுவ வீரர்களுடன் திருமண நிகழ்ச்சியை கொண்டாடிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்

நாட்டின் பாதுகாவலர்களுடன் திருமண நிகழ்ச்சியை கொண்டாடுவதை பெருமையாக கருதுவதாக நீடா அம்பானி கூறியுள்ளார்.

Mumbai:

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகளை ராணுவத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, அவரது தோழி ஷ்லோகா மேத்தாவை கடந்த சனிக்கிழமையன்று திருமணம் முடித்தார். திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

மும்பையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருபாய் அம்பானி சதுக்கத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் முப்படை வீரர்களும், துணை ராணுவ படையினரும், மும்பை போலீசார் மற்றும் ரயில் போலீசார் உள்ளிட்டோரும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். 

பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது காயம் அடைந்த, கை கால்களை இழந்த ராணுவத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
 

215d9ue

ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வரவேற்கும் முகேஷ் - நீடா அம்பானி

இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், '' இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். நாட்டின் பாதுகாவலர்களாக அவர்கள் எங்கள் குடும்ப விழாவில் பங்கேற்றிருப்பது எங்களுக்கு பெருமை. தினந்தோறும் நாட்டிற்கு பெருமை தேடித் தரும் முப்படை வீரர்கள் ஆகாஷையும், ஷ்லோகாவையும் வாழ்த்துவார்கள் என்று நம்புகிறேன்.
மும்பை நகரம் எங்கள் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த நகரத்து மக்கள், போலீசார், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் எங்கள் மீது மிகுந்த அன்பை வைத்துள்ளனர். இதனை நாங்கள் மிகவும் பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் மகிழ்ச்சியை எங்கள் மீது அன்பு கொண்டவர்களுடன் பரிமாறிக் கொள்கிறோம்'' என்று கூறினார். 
கடந்த சனிக்கிழமையன்று வெகு விமர்சையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி தனது தோழி ஷ்லோகா மேத்தாவை கரம் பிடித்தார். அவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

.