Read in English
This Article is From Jan 12, 2019

‘எங்களுக்கு கணக்கு சரியா வந்துடுச்சு..!’- மாயாவதியுடனான கூட்டணி பற்றி அகிலேஷ்

தேசிய அரசியல் முதல் மாயாவதியுடனான கூட்டணி வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அகிலேஷ் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார்

Advertisement
இந்தியா ,

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி நாளை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது

Kannauj:

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி நாளை அதிகார பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தேசிய அரசியல் முதல் மாயாவதியுடனான கூட்டணி வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அகிலேஷ் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார். 

முதலாவதாக அவர் மாயாவதியுடனான கூட்டணி பற்றி பேசுகையில், ‘சென்ற ஆண்டு உத்தர பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தன. அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர். அப்போதுதான் பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைப்பது சிறந்தது என்று எனக்குத் தோன்றியது. 

அந்தத் தேர்தல் நடக்கும் முன்னர் வரை எங்களுக்குள் சரியான நட்புறவு இருக்கவில்லை. ஆனால், அதன் பிறகு எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது' என்று விளக்கமாக பேசினார். 

Advertisement

தொடர்ந்து பாஜக குறித்து அகிலேஷ், ‘தெலுங்கு தேசம் கட்சி முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள், பாஜக-வின் தலைமையை ஏற்க முடியாமல் விலகியுள்ளன. கட்சிகள், பாஜக மீது நம்பிக்கை இழந்து வருகின்றன. இன்னும் நிறைய பேர் பாஜக-வைப் புறக்கணிப்பார்கள். ஆனால், இப்போதும் பாஜக வலுவாகத்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் பிராந்திய கட்சித் தலைவர்களால்தான் பாஜக வலுவாக இருப்பது போல தெரிகிறது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவார்கள்' என்று விமர்சனம் செய்தார். 
 

Advertisement