This Article is From Oct 06, 2018

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி ஏற்படுமா? -அகிலேஷ் கருத்தால் பரபரப்பு

கடந்த புதனன்று பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், தொகுதிப் பங்கீடை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இதனை தாமதம் செய்தால் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விடும் என்று கூறியிருந்தார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி ஏற்படுமா? -அகிலேஷ் கருத்தால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி தங்களை நீண்டகாலமாக காக்க வைக்கிறது என்பது அகிலேஷின் புகார்.

New Delhi:

உத்தரப்பிரதேசத்தில் வலிமையாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசியதைப் போன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பொதுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி வைப்பதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் தங்களுடன் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாகவும், அதற்கடுத்த கட்டத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் அளித்துள்ள பேட்டியில், எங்களை காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக காக்க வைக்கிறது. நாங்களும் எவ்வளவு நாள்தான் பொறுமையுடன் காத்திருப்போம்?. நாங்கள் பொதுத் தேர்தலுக்காக ஜி.ஜி.பி. கட்சியுடனும், சட்டசபை தேர்தலுக்காக பகுஜன் சமாஜ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் கூறியிருக்கும் கருத்துகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி கால தாமதம் செய்து வந்தால், 80 தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு வலுவான கூட்டணி அமையாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

.