This Article is From Feb 01, 2019

''அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை பட்ஜெட் காப்பாற்றுமா?''- அகிலேஷ்

மத்திய இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட் செய்துள்ளார்.

''அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை பட்ஜெட் காப்பாற்றுமா?''- அகிலேஷ்

பொய்களை கேட்க தயாராக இருங்கள் என்று பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் அகிலேஷ்.

New Delhi:

அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை பட்ஜெட் காப்பாற்றுமா என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக அரசின் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது-

நாட்டின் ஒவ்வொரு பாகமும் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நிலைமை அவ்வாறு இருக்கையில் இந்த பட்ஜெட் நாட்டை காப்பாற்றுமா?. பொய்களை மொத்தமாக கேட்க தயாராக இருங்கள். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ''மக்களவை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு விளம்பரத்தனமான திட்டங்களை கொண்டு வருவதற்கு மத்திய பாஜக அரசு முயல்கிறது'' என்று கூறியுள்ளார். 

.