This Article is From Mar 24, 2019

தந்தையின் ஆசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் அகிலேஷ் யாதவ்

மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மாயாவதி அறிவித்த நிலையில, அகிலேஷ் யாதவ் தனது முடிவை அறிவித்துள்ளார்.

தந்தையின் ஆசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் அகிலேஷ் யாதவ்

கன்னோஜ் தொகுதியில் கடந்த 2009-ல் போட்டியிட்டு அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றிருக்கிறார்.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங் யாதவ் தொகுதியான ஆசம்கரில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசம்கர் தொகுதி எம்.பி.யாக இருக்கும் முலாயம் சிங் மணிப்புரி தொகுதியில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். 

மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி அறிவித்த நிலையில், தான் போட்டியிடும் தொகுதியை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2009-ல் நடந்த மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு அகிலேஷ் யாதவ் வெற்ற பெற்றிருந்தார். பின்னர் 2012-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின்னர் காலியான கன்னோஜ் தொகுதியில் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரே மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். 

ஆசம்கர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்பதால்தான் அந்த தொகுதியை அகிலேஷ் யாதவ் தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2014 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இங்கு முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினர் அதிகம். இந்த இரு சமூகமும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கிகளாக கருதப்படுகின்றன. 
 

.