हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 12, 2019

லக்னோ விமானநிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தம்! - யோகி ஆதித்யநாத் அதிரடி!

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் செல்ல இருந்தார்.

Advertisement
இந்தியா (with inputs from Agencies)

Highlights

  • பிரயாக்ராஜ் செல்ல விமானம் ஏற முயன்ற போது அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டார்
  • அலகாபாத் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக திட்டமிட்டிருந்தார்.
  • சட்ட ஒழுங்கு பிரச்சனையை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக யோகி தெர
Lucknow:

லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் அலகாபாத் செல்ல முயன்ற சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தனது டிவிட்டர் பதிவில் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், இதுதொடர்பான புகைப்படத்தையும், போலீஸாருடன் தாங்கள் பேசுவது தொடர்பான காட்சியையும் வெளியிட்டிருந்தார். அதில், விமானத்தின் வழிப்பாதையில் நின்று கொண்டு போலீசார் அகிலேஷ் யாதவை தடுப்பது போலவும் புகைப்படம் உள்ளது.

மற்றொரு புகைப்படத்தில் அகிலேஷ் யாதவ் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் உள்ளது. இதுதொடர்பான அகிலேஷ் யாதவின் குழு வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், விமானத்தில் ஏற முயலும் அகிலேஷை காவலர்கள் தடுத்து நிறுத்துகிறன்றனர். அப்போது, அகிலேஷ் காவலர்களை நோக்கி தன் மீது கைவைக்காதீர்கள் என்றும் கூறுவதுபோல் உள்ளது.
 

மேலும், இதுகுறித்து அகிலேஷ் கூறியதாவது, அலகாபாத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றுவிடுவேன் என அச்சப்பட்டு என்னை விமான நிலையத்தில் பாஜக அரசு தடுத்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, அலகாபாத் பல்கலைக்கழகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றால், இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும்.

Advertisement

அதனால், சட்டம் ஒழுங்கைக் காக்கவே அரசு முயற்சி எடுத்தது. அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகமே அகிலேஷ் வருகையை எதிர்க்கிறது" என்று அவர் கூறினார்.

இதனிடையே, லக்னோ விமானநிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி, உத்தரபிரதேசம் சட்டப்பேரவையில் உள்ள சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏக்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவையில் மையப்பகுதியில் அமர்ந்து கொண்டு முழுக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து தொடர் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
Advertisement