This Article is From Dec 30, 2018

"காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடத்துகிறார் யோகி" - அகிலேஷ் யாதவ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டபோது காவலர் சுரேஷ் வட்ஸ் கொல்லப்பட்டுள்ளார்.

"பாஜக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. காவலர்கள் கொலைக்கு பின்னால் பாஜக தான் உள்ளது" என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சிக்க துவங்கிவிட்டன. ஒரே வாரத்தில் இரண்டு போலீஸார் கலவரத்தில் கொல்லப்பட்டது உத்தர பிரதேசத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சுரேஷ் வட்ஸ் எனும் போலீஸ், பிரதமருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டவர்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். "பாஜக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. காவலர்கள் கொலைக்கு பின்னால் பாஜக தான் உள்ளது. யோகி தான் அவர்களிடம் தொடர்ந்து என்கவுண்டர்களை செய்ய சொல்லி கூறிக்கொண்டே இருக்கிறார்" என்றார்.

முன்னதாக இன்ஸ்பெக்டர் சுபோத் குமார், தற்போது போலீஸ் வட்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்ற கருத்து பாஜகவிடமிருந்து வந்துள்ளது.

"சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது, வன்முறை தலை தூக்கியுள்ளது" என மாயவதியும் குற்றம் சாட்டியுள்ளார். அகிலேஷ், "உத்தர பிரதேசத்தில் யோகியின் காட்டுமிராண்டி தனமான ஆட்சி நடக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.

.