বাংলায় পড়ুন Read in English
This Article is From May 04, 2019

‘கனடா குடியுரிமை என்னுடைய தனிப்பட்ட விஷயம்’ நெட்டிசன்களுக்கு பதில் சொன்ன அக்‌ஷய்

தேவையில்லாமல் என்னுடைய குடியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான அரசியலற்ற ஒரு விஷயம்.

Advertisement
இந்தியா Translated By

“என்னுடைய குடியுரிமை குறித்து ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது என்று புரியவில்லை (File)

Highlights

  • என்னுடைய குடியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது
  • என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை ஒருபோதும் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை
  • யாருக்கும் என்னுடைய நாட்டுப்பற்றினை நிரூபிக்க வேண்டியதில்லை
Mumbai:

தன்னுடைய குடியுரிமை தொடர்பாக ஏன் இவ்வளவு விமர்சனங்கள் எழுகின்றது என் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்திருந்தார் அக்‌ஷய் குமார். மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக விளம்பரங்களிலும் நடித்திருந்தார். ஆனால், அவர் வாக்களிக்கவில்லை. அக்‌ஷய் குமார் வாக்களிக்காததை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து தீர்த்து விட்டனர். அவர் வாக்களிக்காததற்கு காரணம் அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பதுதான் என்று பலரும் கூறினர். ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் குடியுரிமை சர்ச்சை குறித்து அக்‌ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னுடைய குடியுரிமை குறித்து ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது என்று புரியவில்லை. என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை நான் ஒருபோதும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதைப்போலவே 7 வருடங்களாக நான் கனடா சென்றதில்லை என்பது உண்மையே.  நான் இந்தியாவில்தான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி கட்டுகிறேன். யாருக்கும் என்னுடைய நாட்டுப்பற்றினை நிரூபிக்க வேண்டியதில்லை தேவையில்லாமல் என்னுடைய குடியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான அரசியலற்ற ஒரு விஷயம். இந்தியாவை வலிமையாக்க என்னால் ஆன சிறிய பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

அக்‌ஷய் குமார் 2.0 படத்தில்  தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். இது தவிர பேட்மேன், டாய்லெட் போன்று சமூக அக்கறையுள்ள படங்களில் நடித்துள்ளார். ‘ரஷ்டம்' என்ற படத்தில் தேசப்பற்று மிக்க கடற்படை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement