Akshaya Tritiya: இன்று தங்க நகை விற்பனை அதிகரிக்கும்
New Delhi: இந்தியாவில் அக்ஷயா திரிதியை (Akshaya Tritiya) இந்துகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் இந்தியா மற்றும் நேபாளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் முடிவில்லாத செல்வ செழிப்பை குறிக்கும் ஒரு நல்ல நாள். இந்த நாளில் பலரும் தங்கம் போன்ற விலை மதிப்புயர்ந்த பொருட்களில் முதலீடு செய்வது வழக்கம். இன்று நாடெங்கும் அட்சய திரிதயை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் மக்கள் நகை கடைக்கு அணிவகுத்து செல்கின்றனர்.
தீபாவளிக்கு முன்பு வரும் தனுதாரா பண்டிகையில் மக்கள் தங்கம் வாங்கினால் நீடித்து இருப்பதாக நம்புகின்றனர். இன்று தங்க விலை 7 சதவீதம் சரிவை கண்டது. தள்ளுபடிகளை அறிவித்து விற்பனையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். “இந்த நாளில் சிறப்பு சலுகைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். தேர்தலை முன்னிட்டு தங்க விற்பனை குறைவாக இருந்தது. ஆனால் இன்று தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஏஎன் ஐ செய்தி நிருபரிடம் ராஜ்கோட்டில் உள்ள தங்க நகை வியாபாரி கூறியுள்ளார்,
வாடிக்கையாளார் ஒருவர் “இன்றைய நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது வழக்கம். அக்ஷய திரிதியை முன்னிட்டு தங்க நெக்லஸ் ஒன்று வாங்குவேன்” என்று தெரிவித்தார்.
மலபார் தங்கம் மற்றும் வைரம் நிறுவனம் செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடி கொடுத்துள்ளது. டாடா நிறுவனத்தின் டைட்டன் கம்பெனி 25 சதவீதம் தள்ளுபடியினை கொடுத்துள்ளது.
செய்கூலி, சேதாரம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.