This Article is From Jul 10, 2019

வீடியோ வெளியிட்டு இந்தியாவை மிரட்டிய அல் கய்தா தலைவர்!

அல் கய்தாவின் இந்தியக் கிளையைத் தொடங்கியது ஜகிர் முசா என்கிற தீவிரவாதிதான். அவர் கடந்த மே மாதம், காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.

"காஷ்மீரில் நடக்கும் யுத்தமானது, ஒரு தனிப்பட்ட விஷயமாக பார்க்க முடியாது."

New Delhi:

அல் கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஸவாஹிரி, இந்திய ராணுவத்துக்கும், ஜம்மூ காஷ்மீர் அரசாங்கத்துக்கும் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோவை சர்வதேச தீவிரவாத அமைப்பான ‘முஜாஹிதீன் இன் காஷ்மீர்' வெளியிட்டுள்ளது. 

“முஜாஹிதீன் இன் காஷ்மீர், தற்போதைய நிலையில் இந்திய ராணுவத்தின் மீதும்  காஷ்மீரில் இருக்கும் அரசு மீதும் கவனமாக தொடர் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைய வேண்டும். இந்தியாவில் அதிக உயிர்ச்சேதமும் ஏற்பட வேண்டும்” என்று ஸவாஹிரி, வீடியோவில் பேசியுள்ளார். 

அல் கய்தாவின் இந்தியக் கிளையைத் தொடங்கியது ஜகிர் முசா என்கிற தீவிரவாதிதான். அவர் கடந்த மே மாதம், காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். ஹவாஹிரி, காஷ்மீர் குறித்து வீடியோவில் பேசும்போது, ஜகீர் முசாவின் படம், வீடியோவில் வந்து போகிறது. 

“பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசாங்கம் என இரண்டும் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகின்றன. முஜாஹிதீன் அமைப்பைப் பாகிஸ்தான், தனது சொந்த அரசியல் ஆதாயத்துக்காகத்தான் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியா இடத்தில் நிலவும் எல்லைப் பிரச்னையை, பாகிஸ்தான், அமெரிக்க உளவுத் துறை மூலம் சமாளித்து வருகிறது.

காஷ்மீரில் நடக்கும் யுத்தமானது, ஒரு தனிப்பட்ட விஷயமாக பார்க்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லிம் சமூகத்தினர், பல்வேறு சக்திகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதிதான் அது. காஷ்மீரில் நமது ஆட்கள், மசூதிகள், மார்க்கெட் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் குவியம் இடங்களை இலக்காக வைத்து செயல்படக் கூடாது” என்று வீடியோவில் ஸவாஹிரி மேலும் பேசியுள்ளார். 

அல் கய்தா தலைவரின் இந்த வீடியோ வெளியீடு குறித்து, இந்திய உள்துறை அமைச்சகத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “ஜம்மூ காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் தீவிரவாதிகள் அதிகமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு தீவிரவாத செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன. அதை சரிசெய்யும் நோக்கில்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் தீவிரவாதிகளை உற்சாகப்படுத்துவே இந்த வீடியோ” என்று கருத்து கூறுகிறார். 

.