This Article is From Mar 23, 2019

அரிதான முழு-வெள்ளை பென்குவின்... வைரல் புகைப்படம்!

இந்த ஆல்-வொயிட் ஆப்பிரிக்கன் பிளாக்-ஃபுட் பென்குவின் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பிறந்தது.

அரிதான முழு-வெள்ளை பென்குவின்... வைரல் புகைப்படம்!

இந்த பென்குவினின் பாலினம் தெரியாத நிலையில் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை!

Warsaw:

பால்டிக் போர்ட் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த மூன்று மாதங்களேயான 'ஆல்பினோ' பென்குவின் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு நேற்று வந்தது. 

'ஆல்பினோ' என்னும் தோல் நிற குறைபாடுடன் பிறக்கும் பென்குவின்கள் அரிது என்பதால் இந்த குட்டி பென்குவின் உயிர்வாழுமா என்று தெரியாத நிலை எற்பட்டது. இதனால் குட்டி பென்குவின் பிறந்த செய்தி வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த ஆல்-வொயிட் ஆப்பிரிக்கன் ப்ளாக்-ஃபுட் பென்குவின் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பிறந்தது. 

இன்னும் இந்த பென்குவினின் பாலினம் அறியாததால் வலவிலங்கு நிர்வாகிகள், அதற்குப் பெயர் வைக்காமல் இருக்கிறார்கள். 'எங்களுக்குத் தெரிந்த வரைக்கும், இப்படி ஆல்பினோ குறை கொண்டு பென்குவின்கள் வேறு இல்லை' என தான்ஸ்க் வனவினங்கு பூங்கா இயக்குனர் மைகேல் டார்கவுஸ்கி கூறினார்.

மேலும் அவர், 'இந்த குட்டிப் பென்குவின் சுறுசுறுப்பாகவும், நல்ல உணவு உட்கொண்டு பெற்றோர்களின் அரவணைப்பால் நல்ல உடல்நலத்துடனும் இருக்கிறது. மேலும் அதைப் பாதுகாப்பாக வளர்பதற்காக 6 பென்குவின்களுடன் மட்டுமே தற்போதைக்கு வளர்கப்படுகிறது' எனக் கூறினார்.

இந்த 'ஆல்பினோ' பென்குவின் மிகவும் அரிதானது என்றும் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தங்களால் இயன்றவையை செய்துகொண்டிருப்பதாக வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆப்பிரிக்கன் ப்ளாக்-ஃபுட் பென்குவின்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கடந்த 2010 முதல் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

.