ஹைலைட்ஸ்
- தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க இணைய வசதி துண்டிப்பு
- 2 மணி நேரம் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது
- 2016-ல் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் நடவடிக்கை
Algiers, Algeria:
அல்ஜீரியா: அல்ஜீரியாவில், உயர் நிலை பள்ளிகளுக்கான டிப்ளோமா தேர்வில் மாணவர்கள் இணையம் மூலம் முறைகேடுகள் செய்யாமல் இருக்க, நாடு முழுவதும் இணைய வசதியை தடைசெய்தது அந்நாட்டு அரசு.
நாடு முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு இணைய வசதிகளை தடை செய்வதாக அல்ஜீரி டெலிகாம் நிறுவனம் அறிவித்திருந்தது.
”டிப்ளோமா தேர்வில் முறைகேடுகள் இல்லாமல் நடைப்பெற இரண்டு மணி நேர இணைய சேவையை துண்டிக்க அரசு உத்தரவிட்டதால், பொது மக்களுக்கு இணையம் தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.
7,00,000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் டிப்ளோமா தேர்வை எழுதுகின்றனர். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க இணைய சேவை தடை செய்யப்பட்டது.
”2016 ஆம் ஆண்டு தேர்வில் அதிக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். தேர்வு தொடங்கும் முன்னரே, கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.” என்று அல்ஜீரியா தொலை தொடர்பு துறையின் தலைவர், அலி கஹ்லானே கூறினார்.
2,000 மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சியில் மொபைல் போன், டாப்லெட்ஸ் ஆகியவற்றின் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டது.
தாமதாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதியில்லை. மேலும், சிறப்பு தேர்வில் பங்கேற்று எழுத வேண்டும் என்ற விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
மெட்டல் டிடெக்டர்கள் மூலம் மாணவர்களை சோதனை செய்து தேர்வு மையத்திற்கு அனுப்புகின்றனர்.
கேள்வி தாள்கள் தேர்வுக்கு முன்னரே வெளியாகமல் இருக்க, கேள்வி தாள் தயாரிக்கும் இடத்தில் சிசி டிவி காமரா மற்றும் மொபைல் போன் ஜாமர்கள் பொருத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.