This Article is From Mar 20, 2019

சம்ஜோதா குண்டுவெடிப்பு வழக்கில் அசிமானந்தா உள்பட 4 பேர் விடுதலை

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

சம்ஜோதா குண்டுவெடிப்பு வழக்கில் அசிமானந்தா உள்பட 4 பேர் விடுதலை

2007-ல் நடந்த சம்ஜோதா குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அசிமானந்தா விடுவிக்கப்பட்டுள்ளார்.

New Delhi:

சம்ஜோதா குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அசிமானந்தா உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை அரியானாவில் செயல்படும் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு செல்லும் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் கடந்த 2007 பிப்ரவரி 18-ல் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது அரியானாவின் பானிபட் என்ற இடத்திற்கு அருகே இந்த சமபவம் நடந்தது. இதில் 68 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கை முதலில் அரியானா போலீசார் விசாரித்து வந்தனர். இதன்பின்னர் 2010-ல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2011 ஜூன் மாதத்தில் குற்றப்பத்திரிக்கை 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அரியானா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சுவாமி அசிமானந்தா உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் அக்சர்தாம், ஜம்முவின் ரகுநாத் மந்திர் மற்றும் வாரணாசியின் சங்கத் மோச்சன் மந்திர் உள்ளிட்டவைகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக சம்ஜோதா குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டிருக்கிறது.

.