This Article is From Sep 09, 2018

"கல்லூரிகளில் ராகிங்கை ஒழிக்கும் கண்கானிப்பு குழு அவசியம்" - தமிழக அரசு

ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும்

மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ராகிங்கை ஒழிக்க, அனைத்துக் கல்லூரிகளிலும் ராகிங் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில், கல்வி நிறுவனங்களில் ராகிங்கை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை டிஜிபி டி.கே இராஜேந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்துக் கல்லூரிகளிலும் ராகிங் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதன் அவசியம் குறித்து இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. தற்போதுள்ள ராகிங் ஒழிப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. மேலும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.