மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. (File)
Lucknow: அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் இன்று அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு ஒன்றை டிசம்பர் 9-ம் தேதிக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான முடிவில் வாரியம் உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்வதற்கு டிசம்பர் 9ஆம் தேதி வரை எங்களுக்கு நேரம் உள்ளது” என்று முஸ்லீம் சட்ட வாரியத்தலைவர் ஜாபரியப் ஜிலானி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பை மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று சன்னி வக்ஃபு வாரியம் முடிவு செய்தது. ஆனால் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
முக்கிய வழக்குரைஞர்களின் ஒருவரான சன்னி வக்ஃப் வாரியத்தின் முடிவு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று ஜிலானி தெரிவித்தார். நவம்பர் 17 அன்று லக்னோவில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக வாரியம் ஏற்கனவே இறுதி முடிவை எடுத்துள்ளது.
“எங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுபடுத்தி டிசம்பர் முதல் வாரத்தில் பாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யப்போகிறோம். வழக்கைத் தொடர விரும்பவில்லை என்ற சன்னி வக்ஃபு வாரியம் எடுத்த முடிவு சட்டப்பூர்வமாக பாதிக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே பக்கத்தில் உள்ளன என்று ஜிலானி தெரிவித்துள்ளார். “மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கான தேதியை இப்போது அறிவிக்க முடியாது. ஏனெனில் இது யார் சார்பாக தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.என்று தெரிவித்துள்ளார். மேலும் மறு ஆய்வு மனு போடக்கூடிய முஸ்லிம் கட்சியை அயோத்தி காவல்துறை துன்புறுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் மனுவிலும் குறிப்பிடுவோம் என்று தெரிவித்தார்.