ஆல் இந்தியா ரேடியாவில் பாலியல் புகார் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
New Delhi: ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகாரினால் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு சம்பளம் மற்றும் சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தேசிய பெண்கள் ஆணையம் செய்திக் குறிப்பில் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் பணிபுரியும் 9 பெண்கள் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேசிய பெண்கள் ஆணையத்தின் பரிந்துரைகளை ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி அதிகாரிக்கு இரண்டு கட்டமாக ஊதியத்தை குறைத்துள்ளது. ஒருவருடத்திற்கு ஊதிய உயர்வு ஏதும் இல்லை என கூறியுள்ளனர்.
ஒரு வருடத்திற்குப் பின் குறைக்கப்பட்ட ஊதியத்திலிருந்து படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்படும் . இதற்குப் பின் இதை நிர்வாக நடவடிக்கையாக மாற்றப்படுமென ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தேசிய பெண்கள் ஆணையத்தில் இருந்து வந்த தகவலும் நவம்பர் 12 அன்று பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. பிரச்சார் பாரதி பெண்கள் ஆணையம் கொடுத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி பெண்கள் புரோகிராம் எக்ஸிகியூட்டிவ்வாக இருப்பதால் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு வேலை முடிந்து தாமதமாக செல்ல நேர்ந்தால் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.