This Article is From Nov 12, 2018

"கஷோக்கி விஷயத்தில் யாரையும் விட மாட்டோம்" சவுதியை மிரட்டும் அமெரிக்கா!

ஜமால் கஷோக்கி இஸ்தான்பூலில் உள்ள சவுதி அரேபிய அமீரகத்தில் அக்டோபர் 2ம், தேதி கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் சவுதி இதனை மறுத்தாலும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக கொலை என்று ஏற்றுக்கொண்டது.

அமெரிக்க மாகாண செயலாளர் மைக் போம்பியோ ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Washington:

அமெரிக்க மாகாண செயலாளர் மைக் போம்பியோ ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சவுதி பத்திரிக்கையாளர் கஷோக்கி கொல்லப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் விடப்போவதில்லை என்று எச்சரித்துள்ளார். 

ஜமால் கஷோக்கி இஸ்தான்பூலில் உள்ள சவுதி அரேபிய அமீரகத்தில் அக்டோபர் 2ம், தேதி கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் சவுதி இதனை மறுத்தாலும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக கொலை என்று ஏற்றுக்கொண்டது. அவர் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டறியும் பொறுப்பை அமெரிக்கா கட்டாயம் செய்யும், சவுதியும் இதனையே செய்ய வேண்டும் என்று இதற்கு முன் ஹீதர் நர்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனை முறைப்படி அமெரிக்க விசாரித்து தடைகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் மைக் பாம்பியோவும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்த கச்சா எண்ணெய் தேசத்துடன் உள்ள வணிக, பாதுகாப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் சவுதியின் குறிக்கீடுகள் தொடர்பாக மன்னர் முகமது பின் சல்மானுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டார் கஷோக்கி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கொலை விஷயத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்று போம்பியோ தெரிவித்தார். 

ஏறக்குறைய ஏமனில் 10000 பேர் பசியால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் சவுதி அரேபியா ஏமன் மீது போர் தொடுக்கும் எண்ணத்தில் இருப்பதை கஷோக்கி விமர்சித்துள்ளார். அதனால் தான் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

.