Read in English
This Article is From Oct 31, 2018

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்த வழக்கு: தமிழகத்துக்கு சிறப்பு சலுகை!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது. இன்று அந்தத் தீர்ப்பில் சிறிய மாறுதல்களை செய்துள்ளது நீதிமன்றம்

Advertisement
இந்தியா

பட்டாசு உற்பத்தியாளர்கள், ‘சுற்றுச்சூழலகுக்கு உகந்த பட்டாசுகள் தற்போது இருப்பில் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்

New Delhi:

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது. இன்று அந்தத் தீர்ப்பில் சிறிய மாறுதல்களை செய்துள்ளது நீதிமன்றம்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்' என்று கூறியது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலையில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இருக்கிறது. எனவே, முன்னர் குறிப்பிட்டிருந்த 8 முதல் 10 மணி வரை உத்தரவுடன், காலையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும். காலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தது.

Advertisement

இதையடுத்து உச்ச நீதிமன்றம், ‘ஒவ்வொரு மாநிலங்களிலும் தீபாவளியை வெவ்வேறு வகையில் கொண்டாடப்படுவதால், தென் மாநிலங்களில் காலை 4 முதல் 5 மணி வரையும், இரவும் 9 முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கிறோம்' என்று உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றம், ‘டெல்லியைத் தவிர தேசத்தின் மற்ற இடங்களில் தற்போது இருப்பில் இருக்கும் பட்டாசுகளை வெடிக்கலாம். டெல்லியில், ‘க்ரீன் பட்டாசுகள்' என்று சொல்லப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

Advertisement

பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் வழக்கு விசாரணையின் போது, ‘சுற்றுச்சூழலகுக்கு உகந்த பட்டாசுகள் தற்போது இருப்பில் இல்லை. அதை தயாரிப்பதற்கான உட் பொருட்கள் தற்போது இல்லை' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement