This Article is From Jun 21, 2018

லிப்ஸ்டிக் அணிந்த சிறுவனை கேலி செய்தவர்களுக்கு கிடைத்த பதிலடி

லிப்ஸ்டிக் அணிந்த சிறுவனை கிண்டல் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சிறுவனுக்கு பெருகும் ஆதரவு

லிப்ஸ்டிக் அணிந்த சிறுவனை கேலி செய்தவர்களுக்கு கிடைத்த பதிலடி

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன், பளிச்சிடும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூசியதற்கு கேலி செய்யப்பட்டான். இதனை அடுத்து, கிண்டல் செய்தவர்களுக்கான கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிறுவனின் சகோதரி தீக்‌ஷா பிஜ்லானி, சிறுவனுடன் சேர்ந்து சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்திருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

 

“குடும்பத்திலேயே மிகவும் ஆண் தன்மையற்று இருக்கும் என்னுடைய சகோதரர், பளிச்சிடும் நிறங்களால் ஆன லிப்ஸ்டிக் அணிய விரும்புவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை குறித்து கிண்டல் கேலி எழுவது வழக்கம்.” என்றார் தீக்‌ஷா

“சமீபத்தில் இது போன்ற சம்பவம் நடைப்பெற்ற போது, ஓடி ஒளிந்து கொண்டான். முகத்தை காட்டுவதற்கு தயங்கினான்” என்றார்

 

 

 
சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குடும்பத்தில் உள்ள உறவுக்காரர இளைஞர்கள், பளிச்சிடும் நிறத்தாலான லிப்ஸ்டிக் அணிந்து ட்விட்டரில் புகைப்படங்களை பதிவிட்டனர்.

சிறுவனுக்கு அதரவாக தீக்‌ஷா வெளியிட்ட புகைப்பட பதிவு ட்விட்டரில் 4000 லைக்குகளுடன் வைரலானது.

   

“இதன் மூலம் குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டோம் என்ற மன நிலை அவனுக்கு ஏற்படும்.” என்றார் தீக்‌ஷா

இந்த அன்பான ஆதரவால், ஒளிந்து கொண்டிருந்த சிறுவன் புன்னையுடன் புகைப்படங்களுக்கு முகம் காட்ட தொடங்கினான்.

Click for more trending news


.