This Article is From Jan 08, 2019

அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ உயர் அதிகாரிகளான இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.

அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி அழைத்து பேசியிருந்தார்.

New Delhi:

கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்ட அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய ஓய்வு அளித்து தன்னை விடுப்பில் செல்ல வைத்த மத்திய அரசுக்கு எதிராக அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய 2 பேருக்கும் கட்டாய ஒய்வு அளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. நள்ளிரவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

இருப்பினும் முக்கிய கொள்கைகளில் அலோக் வர்மாவால் முடிவு ஏதும் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

.