சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.
New Delhi: சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் சிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பு என்பதை ஏற்க முடியாது என அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த செவ்வயன்று நள்ளிரவில் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரின் மீதான புகாரை தொடர்ந்து அவர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா சிபிஐ இயக்குநராகவும் ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குநராகவும் தொடர்வார்கள். புதிதாக நியமிக்கப்பட்ட எம்.நாகேஸ்வர் ராவ் இடைக்கால பொறுப்பு மட்டுமே வகிப்பார் என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பு என்பதை ஏற்க முடியாது என அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இருவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளதால் இயக்குநருக்கான பணிகள், பொறுப்புகள் நாகேஷ்வர் ராவுக்கு வழங்கப்பட்டன என்றும் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர் என சிபிஐ செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.