This Article is From Jul 24, 2018

அல்வார் மரணம் : போலீஸ் பாதுகாப்பில் இருந்த போது ரக்பர் மரணம் - அமைச்சர் தகவல்

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, ரக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார்

ஹைலைட்ஸ்

  • Rakbar Khan thrashed in Alwar on suspicion of cattle smuggling on Friday
  • Taken to hospital by cops hours after attack took place, declared dead
  • State Home Minister promises judicial inquiry, compensation for victim
Jaipur:

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, ரக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன் 4 மணி நேரங்களாக போலீஸாருடனிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காயமடைந்து உயிருக்கு போராடி வந்த  ரக்பரை கும்பலிடம் இருந்து மீட்டு, மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இடையில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் போலீஸ் இருந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் கூறப்படுகிறது. பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸின் மெத்தனப் போக்கால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், ரக்பர் கான் மீது நடத்திய பிரேத பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது.

அதில், 'ரக்பர் கான் உடலின் பல இடங்களில் பலத்தக் காயம் இருந்தது. அவருக்கு உடலுக்கு உள்ளேயே ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இறக்கும் நேரத்தில் அதிர்ச்சியிலை உறைந்திருக்கிறார் ரக்பர். எதோ ஒரு ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். ரக்பர் உடலில், 7 அல்லது 8 இடங்களில் எலும்பு முறிவு இருக்கிறது' என்று பல திடுக்கிடும் தகவல் பிரதே பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியிளிக்கும் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.ஐ மற்றும் 4 கான்ஸ்டபில்ஸை ராஜஸ்தான் போலீஸ் சஸ்பெண்ட் செய்யதுள்ளனர்.

ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கியான்தேவ் அஹுஜா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து கும்பல் வன்முறை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சார்பில் உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு தரும் தரவுகளை ஆராய்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, பிரதமருக்கு அறிக்கை சமர்பிக்கும். அதனடிப்படையில் இதைப் போன்ற வன்முறை சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவிக்கையில், ரக்பர் போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பலியான ரக்பர் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

.