This Article is From Jul 24, 2018

விஸ்வரூபம் எடுக்கும் அல்வார் சம்பவம்: ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கியான்தேவ் அஹுஜா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

விஸ்வரூபம் எடுக்கும் அல்வார் சம்பவம்: ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
Alwar, Rajasthan:

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, ரக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன் 4 மணி நேரங்களாக போலீஸாருடனிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்து உயிருக்கு போராடி வந்த  ரக்பரை கும்பலிடம் இருந்து மீட்டு, மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இடையில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் போலீஸ் இருந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் கூறப்படுகிறது. பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸின் மெத்தனப் போக்கால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மற்றும் 4 கான்ஸ்டபில்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர், ரக்பர் கானை மீட்டு வரும்போது போலீஸுடன் இருந்தது தொடர்பான புகைப்படம் வெளியான போதுதான் இந்த விஷயம் பூதாகரமானது. எஸ்.ஐ மோகன் சிங், தனது குற்றம் குறித்து கேமரா முன்பு ஒப்புக் கொண்டதால், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது ராஜஸ்தான் போலீஸ். மேலும், அவருடன் 4 கான்ஸ்டபில்ஸையும் சஸ்பெண்ட் செய்துள்ளது ராஜஸ்தான் காவல் துறை. 

4mo1b6jo

‘இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரை போலீஸ் தாக்கியது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆனால், போலீஸ் தரப்பில் அவரை மீட்டுக் கொண்டு வரும் போது சில தவறுகள் நடந்துள்ளது உண்மைதான்’ என்று இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் டி.ஜி.பி என்.ஆர்.கே.ரெட்டி. 

ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கியான்தேவ் அஹுஜா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

‘அல்வாரில் இருக்கும் போலீஸார், இறக்கும் நிலையில் இருந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணி நேரம் ஆக்கியுள்ளனர். ஆனால், மருத்துமனை 6 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்துள்ளது. ஏன்? போகும் வழியில் அவர்கள் ஒரு டீ பிரேக் எடுத்துள்ளனர். இது தான் ஈவு இரக்கமற்ற மோடியின் ‘புதிய இந்தியா’. இதில் மனிதாபிமனம் வெறுப்பாக மாறியுள்ளது’ என்று இச்சம்பவம் குறித்து கடுகடுத்துள்ளார் ராகுல் காந்தி.

ராஜஸ்தானில் தொடர்ச்சியாக நடந்த வரும் இந்த கும்பல் வன்முறைகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி சமூக செயற்பாட்டாளர் தேசீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.  

.