This Article is From Jul 24, 2020

பழம்பெரும் நடனக் கலைஞர் அமலா சங்கர் உயிரிழந்தார்!

அமலா பன்முகத் திறமை கொண்டவராவார். அவர் நடனக் கலைஞர் மட்டுமல்லாது, சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு அவருக்கு பங்கா விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

பழம்பெரும் நடனக் கலைஞர் அமலா சங்கர் உயிரிழந்தார்!

பிரபல நடனக் கலைஞர்களான அமலா சங்கர் மற்றும் உதய் சங்கர்

ஹைலைட்ஸ்

  • நாட்டிய கலைகளில் பெண்களுக்கென இருந்த தடைகளை உடைத்தெறிந்தவர் அமலா
  • அமலா சங்கர் தனது 101 வது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்
  • மேற்கு வங்க அரசு அவருக்கு பங்கா விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
Kolkata:

இந்தியாவின் புகழ்பெற்ற பழம்பெரும் நாட்டிய கலைஞரான அமலா சங்கர் தனது 101 வது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். உலகெங்கிலும் இந்திய இணைவு நடனத்தை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த புகழ்பெற்ற நடனக் கலைஞரான உதய் சங்கரின் மனைவி, அமலா சங்கர் 1930 களில் நடனத்தைக் கற்றுக்கொண்டார். அக்காலக்கட்டங்களில் பெண்கள் அரிதாக பங்கேற்கும் நாட்டிய கலைகளில் பெண்களுக்கென இருந்த தடைகளை உடைத்தெறிந்தவர் அமலா சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

1919-ல் இப்போதைய பங்களாதேஷில் உள்ள ஜெசோரில் எனும் ஊரில் அமலா பிறந்தார். சிறு வயதிலிருந்தே கலை மற்றும் இசையில் ஈடுபாடு கொண்டிருந்த அமலா தொழிலதிபரான தனது தந்தையிடமிருந்து அதற்கான ஊக்கத்தையும் பெற்றார்.

1931 ஆம் ஆண்டில், அமலா ஷங்கர் பாரிஸில் நடந்த சர்வதேச காலனித்துவ கண்காட்சியில் உதய் சங்கரை சந்தித்தார், அப்போது அமலாவுக்கு வயது 11.

அதன் பின்னர் அமலா உதய் சங்கரின் நடனக் குழுவில் சேர்ந்து தனது சர்வதேச பயணத்தை தொடங்கினார். இது ஒரு வரலாற்றுத் தொடக்கமாகும்.

இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பம் நாடு முழுவதும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமலாவின் மாணவர்களும் ரசிகர்களும் என அனைவரும் தங்களுடைய இரங்கலை டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

“இன்று எனது பாட்டி 101 வது வயதில் எங்களை விட்டு விலகியுள்ளார். கடந்த மாதம்தான் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினோம். மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் ஏதும் இல்லாததால் மிகவும் அமைதியற்றவர்களாக உணர்கிறோம். இது ஒரு சகாப்தத்தின் முடிவு. ஐ லவ் யூ(தம்மா) பாட்டி எல்லாவற்றிற்கும் நன்றி.” என அமலாவின் பேத்தி மகளும் நடிகருமான ஸ்ரீநந்தா ஷங்கர் டிவிட் செய்துள்ளார்.

அமலா பன்முகத் திறமை கொண்டவராவார். அவர் நடனக் கலைஞர் மட்டுமல்லாது, சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு அவருக்கு பங்கா விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

.