This Article is From Feb 19, 2019

‘’தீவிரவாதி மசூத் அசாரை நாங்கள் பிடிப்போம்’’ – இம்ரான் கானுக்கு அமரிந்தர் சிங் பதில்

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.

‘’தீவிரவாதி மசூத் அசாரை நாங்கள் பிடிப்போம்’’ – இம்ரான் கானுக்கு அமரிந்தர் சிங் பதில்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.-யின் பங்கு இருப்பதாக அமரிந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

New Delhi:

தீவிரவாதி மசூத் அசாரை உங்களால் பிடிக்க முடியாவிட்டால் நாங்கள் பிடிப்போம் என்று இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதில் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அதன் தலைவராக இருக்கு மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.

அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சிக்கு சீனாவும் பாகிஸ்தானும் முட்டுக்கட்டை போடுகின்றன. ஏற்கனவே இந்தியாவில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கும் மசூத் அசாருக்கும் இடையே தொடர்பு உள்ளது.

இந்த நிலையில் மசூத் அசாரை பிடித்து தராவிட்டால் நாங்களே பிடித்து விடுவோம் என்று பாகிஸ்தான் முதல்வர் அமரிந்தர் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது-

அன்புள்ள இம்ரான் கானே, புல்வாமாவில் தாக்குதல் நடத்தியிருக்கும் மசூத் அசார் பகவல்பூரில் பதுங்கி இருக்கிறார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.யும் உதவியிருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவுக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் நாங்கள் அதனை செய்கிறோம்.

இவ்வாறு அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

.