This Article is From Oct 18, 2018

டெல்லி காற்று மாசு விவகாரம்: பிரதமருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க போதிய நிதி அளிக்க வேண்டும் என்று அமரிந்தர் சிங் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்

டெல்லி காற்று மாசு விவகாரம்: பிரதமருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

கோரிக்கைகள் அடங்கிய கோப்பை மோடியிடம் அளிக்கும் அமரிந்தர் சிங்

New Delhi:

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு அங்கு அதிக புழக்கத்தில் இருக்கும் கார்கள் ஓர் முக்கிய காரணம்.

இருப்பினும் டெல்லி கார்கள் ஏற்படுத்தும் காற்று மாசை விட பக்கத்து மாநிலங்களான அரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதால் எழும் கரும்புகைதான் அதிக காற்று மாசை டெல்லியில் ஏற்படுத்துகிறது.

இதனை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட டெல்லி, பஞ்சாப், அரியானா முதல்வர்களை சந்தித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் இன்று சந்தித்து பேசினார். அப்போது, விவசாய கழிவுகளை விவசாயிகள் எரிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும் மாற்று வழிகளில் விவசாய கழிவுகளை அப்புறப்படுத்தவும் போதிய நிதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

.