This Article is From Jul 15, 2019

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தருடன் கருத்து வேறுபாடு: அமைச்சர் நவ்ஜோத் சித்து ராஜினாமா!

சித்து தனது துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகரப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தருடன் கருத்து வேறுபாடு: அமைச்சர் நவ்ஜோத் சித்து ராஜினாமா!

நகர்புறங்களில் கட்சி மோசமாக செயல்பட்டுள்ளது என அம்ரிந்தர் குற்றம்சாட்டினார்.

ஹைலைட்ஸ்

  • நவ்ஜோத் சித்து ராஜினாமா கடிதம் வழங்கினார்.
  • ஒரு மாதம் முன்னதாகவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • அமரிந்தருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜினாமா செய்ததாக தெரிகிறது.
Chandigarh:


பாஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து கடந்த மாதமே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று முதல்வர் அமிரிந்தர் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங் கூறும்போது, அனைவருக்கும் ஒருவித ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பஞ்சாபில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பிய நவ்ஜோத் சித்துவின் கடிதத்தை இன்னும் படிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் அமைச்சரவையில் மொத்தமுள்ள 17 அமைச்சர்களில், சித்து உட்பட 13 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது. 

எனினும், நவ்ஜோத் சித்து கூறும்போது, முதல்வரின் இலத்திற்கு தனது கடிதம் சென்றடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். 
 

முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் கடந்த ஜூன் 10ஆம் தேதி, அன்றே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து கடிதம் வழங்கினார். 

முன்னதாக, மாநிலங்களவை தேர்தல் நடந்து முடிந்த பின்பு கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது. பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நவ்ஜோத் சித்துவுக்கு மின்சாரத்துறை மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அவர் கைவசம் இருந்த சுற்றுலாத்துறை இலாக்காவும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் 8 இடங்களிலே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, சித்து தனது உள்ளாட்சி துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகரப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். 

இதையடுத்து, தனக்கு தரப்பட்ட புதிய அமைச்சர் பதவியை விரும்பாத சித்து, நீண்ட நாட்களாக பதவி ஏற்காமலே இருந்து வந்தார். தொடர்ந்து, அமைச்சரவை கூட்டங்களையும் அவர் தவிர்த்து வந்தார். இதைத்தொடர்ந்தே, கடந்த மாதம் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இந்நிலையில், நேற்று தனது ராஜினாமா குறித்து கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். 

 

.