This Article is From Aug 08, 2019

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவியிடம் ரூ.23 லட்சம் நூதன மோசடி!

பிரனித் கவுர் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வங்கி கணக்கில் இருந்த ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவியிடம் ரூ.23 லட்சம் நூதன மோசடி!

எதிர்முனையில் பேசிய நபர் தான் ஒரு தேசிய வங்கியின் மேலாளர் என கூறியுள்ளார்.

Chandigarh:

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான பிரனீத் கவுரிடம், ரூ.23 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிரனீத் கவுர் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருந்த போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர் தான் ஒரு தேசிய வங்கியின் மேலாளர் எனவும் உங்களின் சம்பளத்தை கணக்கில் செலுத்த வங்கி கணக்கின் விவரத்தை அளிக்குமாறு கோரியுள்ளார். 

இதனை நம்பிய பிரனீத் கவுர், அவர் கேட்க கேட்க ஒவ்வொரு தகவலாக வங்கி கணக்கு எண்ணில் ஆரம்பித்து, ஏடிஎம் பாஸ்வேர்டு, சிவிசி எண் மற்றும் ஓடிபி வரை அனைத்தையும் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அந்த நபர் இணைப்பை துண்டித்துள்ளார். அவர் பேசி முடித்த சில நொடிகளில், பிரனித் கவுர் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வங்கி கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரனீத் கவுர், தான் ஏம்மாற்றப்பட்டதை உணர்ந்து, உடனடியாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரனீத் கவுரின் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து ஏமாற்றிய நபர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கிறார் என்பதை கண்டறிந்தனர். 

இதையடுத்து பஞ்சாப்பில் இருந்து, ஜார்கண்ட் சென்ற போலீசார் குழு, மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து பஞ்சாப் அழைத்து வருகின்றனர். 

.