This Article is From Jun 30, 2018

அமர்நாத் யாத்திரைக்குத் தற்காலிக தடை- ஜம்முவில் வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக பஹால்கம் பாதை வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மோசமான வானிலை காரணமாக யாத்ரீகர்கள் பயணத்துக்குத் தற்காலிகத் தடை
  • தென் காஷ்மீருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
  • ஜீலம் ந்தி கொள்ளளவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது
Jammu:

கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக பஹால்கம் பாதை வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மோசமான வானிலை காரணமாகவே பால்தல் சாலை வழியான யாத்திரையும் நேற்று நிறுத்தப்பட்டது. தென் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் சங்கம் அருகிலுள்ள ஜீலம் நதிக்கரையின் கொள்ளளவு அபாய எல்லையான 21 அடியைத் தாண்டியதால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

”இன்று மோசமான வானிலை காரணமாகவும் சேதம் அடைந்த சாலைகளின் காரணமாகவும் பால்தல் மற்றும் பஹால்கம் சாலைகளின் வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

மூன்று கட்ட யாத்திரைக் குழுவினர் தங்களது பயணத்தை பகவதி நகர் கூடாரத்தில் இருந்து தொடங்கினர். ஆனால், பஹால்கம் சாலை சேதத்தை அடுத்து அக்குழுவினர் டிக்ரி கூடார மையம் அருகே நிறுத்தப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாகவே அக்குழுவினரின் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை மேற்கொண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக டிக்ரி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ”பழுதடைந்த சாலைகள் காரணமாகவும் அபாயகரமான வானிலையின் காரணமாகவும் தான் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மீண்டும் வானிலை அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தான் யாத்ரீகள் குகைக் கோயிலுக்குச் செல்லலாம்” எனக் கூறியுள்ளனர்.

.