This Article is From Jun 19, 2018

பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெஃப் பெஸோஸ் உலகின் பெரிய செல்வந்தரானார்

அமேசான் ஆப்பிள் நிறுவத்திற்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்தது

பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெஃப் பெஸோஸ் உலகின் பெரிய செல்வந்தரானார்

ஹைலைட்ஸ்

  • ஜெஃப் பெஸோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆனார்
  • திங்களன்று ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்களின் லிஸ்டை வெளியிட்டது
  • பெஸோஸின் செல்வம் ஜூன் 1 முதல் $ 5 பில்லியனை தாண்டியுள்ளது
San Francisco: சான் பிரான்சிஸ்கோ: திங்களன்று ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்களின் லிஸ்டை வெளியிட்டது. அதில் அமேசான் நிறுவனத்தின் உறுமையாளர் மற்றும் CEO வான ஜெஃப் பெஸோஸ் $141.9 பில்லியன் மதிப்போடு உலகின் பணக்கார மனிதராக அறிவிக்கப்பட்டார்.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் $92.9 பில்லியன் வைத்திருக்க பெஸோஸின் செல்வம் ஜூன் 1 முதல் $ 5 பில்லியனை தாண்டியுள்ளது.

சின்ஹூவா செய்தி நிறுவனத்தின் அறிக்கைப் படி உலகின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாள்ர்களில் ஒருவரான வாரன் பபெட், மொத்தம் $82.2 பில்லியன் மதிப்போடு மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெஃப் பெஸோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். அவரது ஆன்லைன் நிறுவனமான அமேசான் ஆப்பிள் நிறுவத்திற்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்தது.

பார்ச்சூன் கடைசி பட்டியலின் படி அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களின் 2018 பட்டியலில் $ 177.87 பில்லியன் வருமானத்துடன் அமேசான் எட்டாவது இடத்தைப் பிடித்தது என்று வெளியிட்டது.
.