அமெரிக்கா அலுவலகத்தில் உள்ள தனது ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் பெண் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் ராய்ட்டர்ஸ்க்கு அளித்த தகவலில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட ஊழியருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
சியாட்டிலிலுள்ள அமேசானின் சவுத் லேக் யூனியன் அலுவலக வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியையும் அமேசான் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேபோல், மிலான், இத்தாலியைச் சேர்ந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)