This Article is From Oct 25, 2019

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு சென்ற அமேசான் ஓனர்! முதலிடத்தில் யார் தெரியுமா?

உலக பணக்கார்கள் பட்டியலில் 24 ஆண்டுகளாக பில் கேட்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளி 2018-ல் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தார். தற்போது பெசோசுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு சென்ற அமேசான் ஓனர்! முதலிடத்தில் யார் தெரியுமா?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.

Seattle:

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமேசான் ஆன்லைன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார். நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அமேசானின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியை நேற்று சந்தித்தது. 

இதனால் பெசோஸ் தனது அமேசான் பங்கில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்  (சுமார் 50 ஆயிரம் கோடி) இழந்தார். இதையடுத்து ஜெஃப் பெசோசின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக (7.37 லட்சம் கோடி ரூபாயாக) குறைந்து விட்டது. 

முன்னதாக பணக்காரர் பட்டியலில் மைக்ரோ சாஃப்ட்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 2-வது இடத்தில் இருந்தார். அவருக்கு மொத்தம் 105.7 பில்லியன் அமெரிக்க டாலர் (7.502 லட்சம் கோடி ரூபாய்)சொத்து இருந்தது. 
 

இந்த நிலையில் முதலிடத்தில் இருந்த ஜெஃப் பெசோசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். ரூ. 7.502 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்திற்கு மீண்டும்  சென்றுள்ளார் பில் கேட்ஸ். 

கடந்த 1987-ம் ஆண்டு முதல் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் இருந்து வருகிறார். அன்றைய தினத்தில் அவரிடம் 1.25 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்.)

அமேசான் ஓனர் ஜெஃப் பெசோசை பொறுத்தளவில் கடந்த 1998-ம் ஆண்டு உலகின் 400 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி உலகப் பெரும் கோடீஸ்வரராக 2018-ல் உயர்ந்தார் பெசோஸ். 

.