Read in English
This Article is From Jul 06, 2020

மத்திய அரசின் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள்!

இதன் காரணமாக மத்திய அரசு கேட்கும் விவரங்களை நிறுவனங்கள் 72 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். அதில் தேசிய பாதுகாப்பு, வரிவிதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் அடங்கும்.

Advertisement
இந்தியா (c) 2020 BloombergEdited by

அமேசான் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

Highlights

  • The government has been working on the policy for at least two years
  • New rules could impose government oversight on how companies handle data
  • The government is likely to appoint an e-commerce regulator

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக வர்த்தக அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட கொள்கை வரைவின்படி அமேசான்.காம் இன்க், ஆல்பாபெட் இன்க் இன் கூகிள் மற்றும் பேஸ்புக் இன்க் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும், இந்நிறுவனங்கள் தரவை(data) எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்து அரசாங்க மேற்பார்வை விதிக்கவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இந்த கொள்கையானது ஆன்லைன் நிறுவனங்களின் மூல குறியீடுகள் மற்றும் வழிமுறைகளுக்கு அரசாங்க அணுகலை கட்டாயப்படுத்தும். இது போட்டியாளர்களால் "டிஜிட்டல் முறையில் தூண்டப்பட்ட சார்புகளுக்கு" எதிராக உறுதிப்படுத்த உதவும் என்று அமைச்சகம் கூறுகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைக் குறிக்கும் வகையில், ஈ-காமர்ஸ் வணிகங்களுக்கு "விளக்கக்கூடிய AI" உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கும் இந்த கொள்கைகள் உதவும்.

தற்போது நமது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம், அரை பில்லியன் பயனர்களைக் கொண்டு வளர்ந்து வருகிறது.  ஆன்லைன் சில்லறை மற்றும் உள்ளடக்க ஸ்ட்ரீமிங் முதல் செய்தி மற்றும் டிஜிட்டல் பேமென்டுகள் வரை எல்லாவற்றிலும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த ஒவ்வொரு பிரிவிலும் உலகளாவிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. உள்ளூர் தொடக்க நிறுவனங்கள் சீன தொழில்நுட்பங்களுடன் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய அரசு சீன தொழில்நுட்பங்களுக்கு பாரபட்சம் காட்டி வருவதால் இந்த உள்ளூர் நிறுவனங்கள் அரசிடம் உதவி கோரியுள்ளன.

Advertisement

இதன் காரணமாக சில முன்னணி நிறுவனங்களிடையே பெரும்பாலான தகவல் களஞ்சியத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு மேற்குறிப்பிட்ட கொள்கை வழிவகுக்கும்.

இந்த கொள்கையின்படி, மக்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் சேமிக்கும் தரவுகளை உள் நாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என அரசின் கொள்கை வரைவு கூறியுள்ளது.

Advertisement

இதன் காரணமாக மத்திய அரசு கேட்கும் விவரங்களை நிறுவனங்கள் 72 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். அதில் தேசிய பாதுகாப்பு, வரிவிதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் அடங்கும்.

இந்த வரைவுக் கொள்கையின் அடுத்தப்படியாக  தொலைபேசி எண்கள், வாடிக்கையாளர் புகார் தொடர்புகள், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட விற்பனையாளர்களின் விவரங்களை நுகர்வோருக்கு வழங்க மின்வணிக தளங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது.  மேலும், கட்டண டோக்கன்களைப் பயன்படுத்தும் நேரடி ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள், முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டண சேனல்கள் மூலம் பயனர்கள் இத்தகைய பரிவர்த்தனைகளை வழிநடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மதிய அரசின் கொள்கை வரைவு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

Advertisement