বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 16, 2019

அமேசானில் தேங்காய் சிரட்டைக்கு இவ்வளவு விலையா.. அடேங்கப்பா!

இது நிச்சயமாக உங்களை அதிர்ச்சியில் உரையச்செய்யும்!

Advertisement
விசித்திரம்

1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சாதாரண தேங்காய் சிரட்டைகள்!

அடுத்த முறை நீங்கள் தேங்காயை உபயோகப்படுத்திவிட்டு அதை குப்பைகளில் போடுவதற்கு முன்னர் அமேசானில் அதற்கு விதிக்கப்பட்ட விலையை மற்றும் பார்க்க வேண்டியது இருக்கும். ஏனெனில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனத்தில் இந்த தேங்காய் சிரட்டைகளுக்கு ரூபாய் 1,300 வலை நிர்ணயத்துள்ளனர்.

ஆம் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என தெரிகிறது அதனால் தான் கீழே நாங்கள் சில புகைப்படங்களை இணைத்துள்ளோம். இதை இணையத்தில் பார்த்த  இந்தியர்கள் திடுக்கிட்ட நிலையில், இந்த தேங்காய் சிரட்டைகள் பற்றிய தகவலில் ‘உண்மையான மற்றும் அசல் தேங்காயால் செய்யப்பட்டதால் இதில் சில குளிகள் இருக்கும்' என கூறியிருந்தது.

'நேச்சுரல் தேங்காய் சிரட்டைகள்' என பிரண்டிங் செய்யப்பட்ட இந்த சாதாரண தேங்காய் மூடிகள் ரூபாய் 1,289 முதல் 2,499 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நம்பவில்லையா இதோ படங்கள் உங்களுக்காக :

 
இச்சம்பவத்தால், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களே அதிர்ச்சியடைந்தனர். அமேசானில் இது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் இதை 20 ரூபாய்க்கும் குறைவாக வாங்கி (தோங்காவுடன்) சிரட்டைகளை பயணில்லாததால் அதை குப்பைகளில் போடுவது வழக்கம்.
 
இச்செய்தி சில நொடிகளில் ட்விட்டரில் பரவ, அதிலிருந்து ஒரு சில கமெண்டுகள் மற்றும் ரியாக்ஷன்கள் உங்களுக்காக:

சிலருக்க இதை கண்டதும் வணிகம் செய்வதற்கான அலோசனைகளும் தோன்றின!

அமேசானில், இந்த தேங்காய் சிரட்டைகளின் விற்பனைக்கு கலப்பு ரிவ்யூக்கள் வந்துள்ளன. 'கன்னடத்தில் இதை நாங்கள் சிப்பு (பயன் இல்லாதது) என்று கூறுவோம், இந்த பிரோஜனமற்ற தேங்காய் சிரட்டைகளை வாங்குவோர்களுக்கு எனது அனுதாபங்கள்' என கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிலர் தங்களது மாற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ‘இந்த நேச்சுரல் தேங்காய் சிரட்டைகளை பல்வேறு முறைகளில் பயன்படுத்த முடியும். மேலும் ஷோரூம்களில் இந்த சிரட்டைகள் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அமேசானில் எனது தோழி 1300 ரூபாய்க்கு வாங்கினார்… கிரேட் அமேசான்' என மற்றோரு வாடிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதைபற்றி உங்களது கருத்து என்ன? கமெண்டில் தெரிவிக்கவும்!

Advertisement