This Article is From Aug 27, 2019

“முதல்ல உங்கள பாருங்க”- பற்றி எரியும் அமேசான் தீயை அணைக்க முன்வந்த ‘ஜி7’- உதாசீனப்படுத்திய பிரேசில்!

Amazon forest fire: பிரேசிலுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருகிறது. 

“முதல்ல உங்கள பாருங்க”- பற்றி எரியும் அமேசான் தீயை அணைக்க முன்வந்த ‘ஜி7’- உதாசீனப்படுத்திய பிரேசில்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற நாடுகள், அமேசான் தீயை அணைக்க உதவுவதாக பிரேசிலுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது. (AFP)

ஹைலைட்ஸ்

  • பிரான்ஸில்தான் ஜி7 மாநாடு நடந்தது
  • ஜி7 மாநாட்டில், அமேசான் காட்டுத் தீ விவகாரம் விவாதிக்கப்பட்டது
  • முன்னதாக அமேசான் காட்டு தீ குறித்து,அதிபர் மாக்ரன் வருத்தம் தெரிவித்தார்
Braslia, Brazil:

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசானில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருகிறது. சர்வதேச அளவில் அமேசான் காட்டுத் தீ விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், பிரான்சில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டிலும் அது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி7 மாநாட்டில் பங்கேற்ற நாடுகள், அமேசான் தீயை அணைக்க உதவுவதாக பிரேசிலுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன. அதை வேண்டாம் என்று மட்டும் சொல்லி உதாசீனப்படுத்தாமல், கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது பிரேசில் அரசு தரப்பு.

“ஜி7 நாடுகளின் உதவிக்கு நன்றி. ஆனால், ஐரோப்பவில் காட்டு வளர்ச்சியை அதிகப்படுத்த தற்போது ஒதுக்கியுள்ள நிதி (20 மில்லியன் டாலர்) தேவைப்படலாம். உலகின் தொன்மைத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தில் ஏற்பட்ட தீயைக் கூட பிரான்ஸ் அதிபர் மாக்ரானால் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் நாட்டுக்கு அவர் என்ன சொல்லித் தர நினைக்கிறார். தற்போது ஒதுக்கப்பட்டு நிதியானது பிரான்ஸ் நாட்டுக்கும் அதற்குக் கீழ் இருக்கும் காலனிகளுக்கும் தேவைப்படலாம்.

பிரேசில் ஒரு ஜனநாயக நாடு. அதனிடம் எப்போதும் காலனியாதிக்க கொள்கை இருந்ததில்லை. ஆனால், பிரான்ஸ் அதிபர் அந்த நினைப்பில்தான் இருக்கிறாரோ” என்று கறாராக இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றியுள்ளது பிரேசில் அரசு தரப்பு.

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார். அதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனியாதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். 

இந்த விவகாரத்தால் பிரேசிலுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருகிறது. 

ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டுத் தீயை அணைக்க, நிதி ஒதுக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டபோது, பிரேசிலின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அதை வரவேற்றார். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். இதுவரை அமேசானில் ஏற்பட்ட காட்டுத் தீ, 9,50,000 ஹெக்டேர் காட்டை அழித்துள்ளது. ராணுவத்தின் உதவியோடு காட்டுத் தீயை அணைக்க பிரேசில் போராடி வருகிறது. 
 

.