அமேசானில் பூனை உணவு ஆர்டர் செய்தவருக்கு ஸ்டன் கன் மற்றும் பெப்பர் ஸ்ப்ரே பெற்றுள்ளார்.
கனடாவில் உள்ள பெண் ஒருவர் அமேசானில் பூனை உணவு ஆர்டர் செய்ததில் ஸ்டன் கன் (Stun Gun) எனும் வலியை உண்டாக்கும் துப்பாக்கியையும், பெப்பர் ஸ்ப்ரேயையும் பெற்றுள்ளார். இந்த இரண்டுமே கனடாவில் தடை செய்யப்பட்டவை. ஜாகின்தே கார்டின், பார்சல் அவரது வாசல் கதவில் இருந்ததாகவும், இதனை அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
"நான் அந்த பார்சலை எடுத்து என் முகவரியை சரிபார்த்து அப்படியே வைத்துவிட்டேன். என் கணவர் வந்துதான் இதனை பார்த்தார்" என்றார். மேலும், "எங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால் என்ன செய்வது" என்றார்.
அமேசான் இதற்கு, "இது பார் கோடை ஸ்கேன் செய்யும் போது நடந்த தவறு. அமெரிக்காவில் உள்ள இடத்தில் தவறான லேபிள் ஓட்டப்பட்டதால் நடந்த தவறு. அந்த பார்சலில் தான் ஸ்டன் கன் மற்றும் பெப்பர் ஸ்ப்ரே இருந்தது" என்று விளக்கமளித்துள்ளது.
இது எதிர்பாராத விஷயம் என்றும், இது மீண்டும் நடக்காது என்றும் அமேசான் கூறியுள்ளது. வாடிக்கையாளருடன் நேரில் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
அமேசான் தற்போது அவருக்கு பூனை உணவை அனுப்பியுள்ளது.