வீடுகளுக்குள் உள்ளவர்களின் தலைமுடி உறைந்திருப்பது, வீடுகளை பனி மூடியுள்ள காட்சிகள் போன்றவை அதிர்ச்சியடைய வைக்கின்றன.
அமெரிக்காவின் மிட் வெஸ்ட் பகுதி வரலாறு காணாத குளிரை சந்தித்து வருகிறது. துருவப்பகுதிகளில் உண்டான காலநிலை மாற்றம் காரணமாக இந்த சூழல் நிலவுகிறது. இந்த பாதிப்பின் காரணமாக வெப்பநிலை மைனஸ் 29 டிகிரியை தொட்டுள்ளது. இது அண்டார்டிகாவைவிட மோசமான வெப்பநிலை.
சமூக வலைதளங்களில் குளிர் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு வீடுகளுக்குள் உள்ளவர்களின் தலைமுடி உறைந்திருப்பது, வீடுகளை பனி மூடியுள்ள காட்சிகள் வேதனையளிக்கும் விதமாக உள்ளன.
லோவாவில் ஒரு பெண்ணின் தலைமுடி உறைந்திருபது போன்ற வீடியோ 16.7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. டெய்லர் ஸ்காலோன் என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.
மிட்வெஸ்ட் மற்றும் வடகிழக்கு பகுதிகளை குளிர் 20 ஆண்டுகளில் இப்போது கொடுமையாக தாக்கியுள்ளது
Click for more
trending news