বাংলায় পড়ুন Read in English
This Article is From May 26, 2019

ஸ்மிரிதி இராணிக்காக தேர்தல் பணியாற்றிய முன்னாள் கிராமத் தலைவர் சுட்டுக் கொலை

அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சில சந்தேகத்திற்கு உரிய நபர்களை காவலில் வைத்திருக்கிறோம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது பழைய சர்ச்சை அல்லது அரசியல் தகராறாக இருக்கலாம் என்று அமேதி காவல்துறை அதிகாரி 

Advertisement
இந்தியா Edited by
Amethi, UP:

உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுயில் முன்னாள் கிராமத் தலைவரும்  ஸ்மிரிதி இராணிக்காக தேர்தல் பணியாற்றிய பாஜக ஆதரவாளர் சுரேந்தர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.  

சம்பவம் நடந்த உடனே உடனடியாக  லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. கொலைக்கான நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சில சந்தேகத்திற்கு உரிய நபர்களை காவலில் வைத்திருக்கிறோம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது பழைய சர்ச்சை அல்லது அரசியல் தகராறாக இருக்கலாம் என்று அமேதி காவல்துறை அதிகாரி 

சுரேந்திர் சிங் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தத்தெடுத்த கிராமத்தில் உள்ளவர். பரோலியா கிராமத்தின் முன்னாள் தலைவர். ஸ்மிரிதி இராணி மக்களவை பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். பொதுக்கூட்டங்களில் தனது பேச்சு மூலமாக பாஜக தலைவர்களிடையே புகழ்பெற்றார்.

Advertisement

ஸ்மிரிதி இராணி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை 55,000 வாக்குகள் வித்தியாத்தில் தோற்கடித்தார்.

Advertisement