This Article is From Feb 04, 2020

கொரோனா பாதிப்பால் டெல்லி - ஹாங்காங் விமான சேவையை நிறுத்துகிறது ஏர் இந்தியா!!

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவின் வுஹான் நகரை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஹாங்காங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் டெல்லி - ஹாங்காங் விமான சேவையை நிறுத்துகிறது ஏர் இந்தியா!!

பிப்ரவரி 8-ம்தேதியில் இருந்து ஹாங்காங்கிற்கு விமானப் போக்குவரத்தை ஏர் இந்தியா நிறுத்திக் கொள்கிறது.

New Delhi:

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 8-ம்தேதியில் இருந்த ஹாங்காங்கிற்கு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஷ்வனி லோஹானி, ‘கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு ஹாங்காங்கிற்கு விமான சேவையை தற்காலிகமாக ஏர் இந்தியா நிறுத்திக்கொள்கிறது. பிப்ரவரி 7-ம்தேதி ஏ.ஐ.314 என்ற விமானம் ஹாங்காங்கிற்கு செல்லும். அதுவே கடைசி விமானம் ஆகும்' என்று பேட்டி அளித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஹாங்காங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இண்டிகோ விமான நிறுவனம் சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனம் டெல்லி – ஷாங்காய் இடையிலான விமானப் போக்குவரத்தை நிறுத்தியதுடன், அந்த வழியை டெல்லி – ஹாங்காங்கிற்கு மாற்றி அமைத்தது. எதிர்வரும் பிப்ரவரி 8-ம்தேதியில் இருந்து டெல்லி – ஹாங்காங் ஏர் இந்தியா விமான சேவையும் நிறுத்தப்படும்.

.