This Article is From Feb 13, 2020

கொரோனா பீதி: நீண்ட பரிசோதனைகளுக்கு பின் சீன சரக்கு கப்பலுக்கு அனுமதி!

கொல்கத்தாவுக்கு வருகை தர அனுமதிக்கப்பட்ட கப்பல் 19 சீனக் குழு உறுப்பினர்களுடன் இன்று மாலை 5.30 மணி அளவில் துறைமுகத்தை வந்த சேர வாய்ப்புள்ளது.

கொரோனா பீதி: நீண்ட பரிசோதனைகளுக்கு பின் சீன சரக்கு கப்பலுக்கு அனுமதி!

சீன சரக்குக் கப்பலான ஜீனியஸ் ஸ்டாரை கொல்கத்தாவிலிருந்து 120 கீ.மி தொலைவில் உள்ள சாகர் தீவில் துறைமுக அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்

Kolkata:

கொரோனா வைரஸ் பீதி உச்சத்தில் இருக்கும் நிலையில், 19 சீனக் குழு உறுப்பினர்களுடன் ஷாங்காயில் இருந்து ஜன.29ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல் இன்று மாலை கொல்கத்தா துறைமுகம் வர உள்ளது. 

இதனிடையே, நேற்றைய தினம் சீன சரக்குக் கப்பலான ஜீனியஸ் ஸ்டாரை கொல்கத்தாவிலிருந்து 120 கீ.மி தொலைவில் உள்ள சாகர் தீவில் துறைமுக அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். தொடர்ந்து, கொல்கத்தா துறைமுகத்தை சேர்ந்த மருத்துவக்குழுவை அனுப்பி வைத்து கப்பலில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதித்தனர். 

இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவுக்கு வருகை தர அனுமதிக்கப்பட்ட இந்த கப்பல் இன்று மாலை 5.30 மணி அளவில் துறைமுகத்தை வந்து சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு குழு உறுப்பினர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை சோதிக்க மீண்டும் அவர்கள் தெர்மல் ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்படுவார்கள். 

0co472p

ஜீனியஸ் ஸ்டார் கப்பல் குழுவினரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இரண்டாவது முறையாக நடக்கும் இந்த சோதனையை மேற்குவங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது சுகாதார அமைப்பு பரிசோதனை செய்கிறது. ஜன.29ம் தேதி ஷாங்காயில் இருந்து சரக்கு கப்பல் புறப்பட்டதில் இருந்து அந்த கப்பலின் கேப்டன் கொல்கத்தாவில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தங்களது உடல்நிலை குறித்த தகவல்களை பதிவு செய்து வந்துள்ளார்.

சமீபத்திய வாரங்களில் கொல்கத்தா துறைமுக எல்லைக்கு சீனாவில் இருந்து வரும் முதல் கப்பல் இதுவல்ல. ஏற்கனவே கடந்த பிப்.7ம் தேதி சீனாவிலிருந்து இரண்டு கப்பல்கள் ஹால்டியா வளாகத்திற்கு வருகை தந்தன. 

இதேபோல், அண்மையில் கேரளாவின் கொச்சியில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பா என்பதை  பரிசோதிப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புனேவைச் சேர்ந்த தேசிய வைராலஜி மையம் தகுதந்த சோதனைகள் செய்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 60,000 பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். மேலும், சீனாவில் குறைந்தது 1,355 பேர் வைர உயிரிழந்துள்ளனர். 

.