This Article is From Jul 31, 2020

33 வருட முயற்சிக்குப் பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்!

"அதிர்ஷ்டவசமாக, எனக்கு 10ஆம் வகுப்பு முடிவுகளைக் காட்டாமலையே பாதுகாப்புக் காவலர் வேலை கிடைத்தது.

33 வருட முயற்சிக்குப் பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்!

33 வருட முயற்சிக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்!. (ANI)

Hyderabad:

உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் கல்வியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமயத்தில், 51 வயதான ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 33 ஆண்டுகளாக தனது 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். 

முகமது நூருதீன் என்ற அந்த நபர் கடந்த 33 ஆண்டுகளாக தனது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற முயற்சித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு ஆங்கில பாடம் என்பது சற்று கடினமானது, என்பதால் அவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியுள்ளார், அவருக்கு கற்பிப்பதற்கு யாரும் இல்லை.

எனினும், இந்த ஆண்டு அவர் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து தெலுங்கானா அரசு 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. 

"எனக்கு உதவி செய்யவோ அல்லது கல்வி கற்பிக்கவோ யாரும் இல்லாததால் நான் ஆங்கிலத்தில் பலவீனமாக இருந்தேன். ஆனால் நான் எனது சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவோடு தொடர்ந்து, படித்தேன். 33 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்து வந்தேன். பாதுகாப்பு காவலர் பணிக்கு, 10 ஆம் வகுப்பு முடிவுகளை கொடுக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது, அதனால் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்து வந்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.

"அதிர்ஷ்டவசமாக, எனக்கு 10ஆம் வகுப்பு முடிவுகளைக் காட்டாமலயே பாதுகாப்புக் காவலர் வேலை கிடைத்தது. 1989 முதல் நான் ஒரு பாதுகாப்புக் காவலராக என் வேலையைத் தொடர்ந்தேன், இப்போது எனக்கு ரூ.7,000 சம்பளம் கிடைக்கிறது. எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கொரோனா காரணமாக அரசு விலக்கு வழங்கியதால், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றேன், "என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தனது மேற்படிப்பை தொடர உள்ளதாகவும் முகமது நூருதீன் தெரிவித்துள்ளார். 

.