பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வெளியே விட்டுவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளளார்.
ஹைலைட்ஸ்
- கால்டாக்சி டிரைவர் சுந்தர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துள்ளார்.
- அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி வந்துள்ளார்.
- மீண்டும் அந்த பெண்ணுடனான உறவை தொடர்ந்துள்ளார்.
Chennai: பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை (Pollachi Sexual Abuse Case) செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கும் நிலையில், நாகையில் இதேபோல இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, குற்றும்சாட்டப்பட்டுள்ள வாலிபர் சுந்தர் கோவிலுக்கு செல்லலாம் எனக்கூறி அந்த பெண்ணுடன் புதுச்சேரி காரைக்காலில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார், அப்போது அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியவை காட்டி வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என அவர் மிரட்டி வந்துள்ளார்.
கால் டாக்சி டிரைவராக சுந்தர், ஏற்கனவே இந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். எனினும் சுந்தர் மீது சந்தேகமடைந்த அவர் அவரிடம் இருந்து விலகி இருந்துள்ளார். ஆனால், மீண்டும் அந்த பெண்ணிடம் நம்பிக்கை ஏற்படுத்தி தனது காதலை தொடர்வதுபோல் நடித்து வந்துள்ளார். இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், சுந்தர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், தனியுரிமை மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பொள்ளாச்சியில் (Tamil Nadu Pollachi Case) கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விரைவில் சிபஐக்கு மாற்றப்பட உள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை மிரட்டியதாக பொள்ளாச்சி அதிமுகவை சேர்ந்த பார் நகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த விவாகரம் குறித்து மாவட்ட எஸ்.பி., செய்தியாளர்களை சந்திக்கும் போது, பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டார்.
இதேபோல் இந்த வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையிலும், மாணவியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
மேலும் படிக்க -‘எப்படி பெண்களை சிக்க வைத்தோம்..!'- பொள்ளாச்சி கொடூரம் பற்றி வீடியோ வாக்குமூலம்