This Article is From Jul 14, 2020

ராஜஸ்தான் காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம்: ராகுல் காந்தி அறிவித்த ‘மன் கி பாத்’!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதைப் போன்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் திட்டம் பற்றி காங்கிரஸ் அறிவித்தது. அந்தக் கட்சி, “தேஷ் கி பாத்” என்னும் தலைப்பில் கருத்து தெரிவிக்க உள்ளதாக கூறியது. 

ராஜஸ்தான் காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம்: ராகுல் காந்தி அறிவித்த ‘மன் கி பாத்’!

இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ராகுல் காந்தி, சூசகமான ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது
  • துணை முதல்வர் சச்சின் பைலட் அரசுக்கு எதிராக போர்க்கொடி
  • டெல்லியில் முகாமிட்டுள்ளார் சச்சின் பைலட்
New Delhi:

காங்கிரஸூக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிய, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதன் மூலம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கலைக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சச்சின் பைலட் இன்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக ஒரு புறம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் டெல்லியில் முகாமிட்டுள்ளார் பைலட். அவர் சீக்கிரமே ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக இன்னொரு புறம் கூறப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ராகுல் காந்தி, சூசகமான ட்விட்டர் பதிவை இட்டுள்ளார். ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தைக் குறிப்பிடாமல் ராகுல், “இன்று பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள், பாசிச நோக்கத்தோடு செயல்பட்டுள்ளன. வெறுப்பை உமிழும் பிரசாரத்தை தொலைக்காட்சி சேனல்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை வைத்தும் தவறான தகவல்களை வைத்தும் இதைச் செய்துள்ளன. இதைப் போன்ற அணுகுமுறை இந்தியாவை சுக்குநூறாக்குகிறது.

எங்களின் அன்றாட நடவடிக்கைகள், வரலாறு மற்றும் நெருக்கடிகள் குறித்து மிகத் தெளிவாக சொல்ல இருக்கிறோம். உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். 

நாளை முதல், எனது கருத்துகளை வீடியோ மூலம் நான் பகிர்வேன்” என ‘பன்ச்' உடன் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் ரேடியோ மூலம் ‘மன் கி பாத்' என்னும் தலைப்பில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதைப் போல ஒரு விஷயத்தைத்தான் ராகுல் காந்தி ஆரம்பிக்க உள்ளதாக பலரும் ஆருடம் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதைப் போன்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் திட்டம் பற்றி காங்கிரஸ் அறிவித்தது. அந்தக் கட்சி, “தேஷ் கி பாத்” என்னும் தலைப்பில் கருத்து தெரிவிக்க உள்ளதாக கூறியது. 

ராகுல் காந்தியும், காங்கிரஸ் தரப்பும் தொடர்ந்து மத்திய அரசை, ‘தவறான தகவல்களை பரப்புவது மற்றும் பாசிச நோக்குடன் நடந்து கொள்வது' என குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. 

கடந்த வாரம் ராகுல், “தன்னைப் போலவே இந்த உலகம் இருக்கும் என்று நம்புகிறார் மோடி. எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது, அல்லது எல்லோரையும் மிரட்டி விடலாம் என்று அவர் நினைக்கிறார். உண்மைக்காக போராடுபவர்களுக்கு விலையும் கிடையாது, மிரட்டவும் முடியாது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லை” என சாடினார். 

அதேபோல லடாக் எல்லையில் சீன ராணுவத்தால், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே ராகுல், மத்திய அரசு மீதும் மோடி மீதும் கறார் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். 

மேலும் கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள லாக்டவுன் காலக்கட்டத்தில் ராகுல், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டவர்களோடு இந்தியப் பொருளாதாரம் குறித்தும், முமு முடக்க நடவடிக்கையின் தாக்கங்கள் குறித்தும் பேசியுள்ளார். 
 

.